‘துணிவு’ சில விஷயங்களை கற்றுக்கொடுக்கும் - இயக்குனர் எச் வினோத் !

thunivu

‘துணிவு’ திரைப்படம் சில விஷயங்களை கற்றுக்கொடுக்கும் என இயக்குனர் எச் வினோத் தெரிவித்துள்ளார். 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படம் எந்த மாதிரியாக இருக்கும் என்பது குறித்து சில சுவாரஸ்சியமான தகவல்களை இயக்குனர் எச்.வினோத் பகிர்ந்துள்ளார். அதில் ‘துணிவு’ படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைவருக்குமான படமாக இருக்கும். 

thunivu

இந்த படத்தை எந்த ஜானரிலும் அடைக்க தேவையில்லை. இந்த படம் உங்களுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுக்கும். மேலும் பேசிய அவர், பணத்திற்கு பின்னாளிலிருக்கும் விஷயங்கள் குறித்தும், பணத்தை அடிப்படையாக வைத்தும் இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது இந்த படம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும். 

thunivu

இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதல்ல. அப்படி உண்மை சம்பவங்களை தழுவி எடுத்தால் சர்ச்சைகள் வரும். அஜித் போன்ற நடிகரை வைத்து அப்படிப்பட்ட ரிஸ்க்கை எடுக்க முடியாது. மிகப்பெரிய நடிகர் ஒருரின் படத்தை இயக்கும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்ற பிரஷர் இருக்கும். எனக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் என்ன பண்ண முடியுமோ அதை நான் செய்திருக்கிறேன். இந்த படத்திற்காக சில சமரசங்களை செய்துள்ளேன். அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும். அதை நாம் மறுக்க முடியாது என்று கூறினார். 

 

 

Share this story