பைக்கில் மிரட்டலான லுக்கில் அஜித்.. ‘துணிவு’ மாஸ் புகைப்படம் வெளியீடு !

thunivu

‘துணிவு’ படத்தில் நடிகர் அஜித் மிரட்டலாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

‘வலிமை’ படத்திற்கு அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். 

thunivu

உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் மிரட்டல் லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பைக் ஒன்றில் முகமூடி அணிந்து துப்பாக்கியுடன் மிரட்டலாக அஜித் இருக்கிறார். ஏற்கனவே துணிவு படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இது வில்லனுக்கான கெட்டப் என கூறப்படுகிறது. 

Share this story