நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே...!

dhanush

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.

da

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Share this story