அஜித்திற்கு ஜோடியாகும் இரு முன்னணி நாயகிகள்... சுதந்திர தினத்தில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு !

ajith

அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தின் படத்தின் ஷூட்டிங் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட காத்திருக்கின்றன. மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்ட இந்த படம் நான்கு மாதங்களாகியும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. அஜித்தும் அடுத்தக்கட்ட பைக் பயணத்தை தொடங்கி சென்றுக்கொண்டிருக்கிறார். 

ajith

அதனால் எப்போது தான் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. 

ajith

இதுதவிர இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார். ஏற்கனவே திரிஷா நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது கதாநாயகியாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதோடு வில்லன்களாக நடிகர்கள் அர்ஜூன் மற்றும் அர்ஜூன் தாஸ் இருவரும் நடிக்கவுள்ளனர். லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்தை ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனிஇயக்கவுள்ளார். அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story