"எனக்கு தூக்கமே வராது" -இப்படி கூறும் நடிகர் யார் தெரியுமா ?

ajith
நடிகர் அஜித் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்க படுகிறார் .இவர் சினிமா தவிர கார் ரேஸிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று வருகிறார் .அவர் சினிமா போலவே கார் ரேஸையும் நேசித்து வருகிறார் .சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அவர் ரேஸில் கலந்து கொள்வார் .அவர் விவேகம் ,வலிமை போன்ற படங்களில் நடித்து சாதனை புரிந்தார் .
குட் பேட் அக்லி படத்தில் கடைசியாக நடித்திருந்த அஜித், தற்போது கார் ரேஷிங்கில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், தனது தொழில் வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தூக்கமே வராது என்று கூறினார். தூக்கக் கோளாறு காரணமாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாக அவர் தெரிவித்தார். குட் பேட் அக்லி படத்திற்கு அடுத்ததாக அஜித் மீண்டும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.கே. 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

Share this story