இணையத்தில் வைரலாகும் அஜித் - வெங்கட் பிரபு புகைப்படம்..! அப்போ மங்காத்தா 2 ஆரம்பமா ?

முழுக்க முழுக்க எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஜித்தின் லுக் பெருவாரியான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இன்று வரையிலும் மங்காத்தாவின் தீம் மியூசிக் மற்றும் அப்படம் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகிறது.
ஆனால், அதற்குப் பிறகு வெங்கட் பிரபு - அஜித் குமார் காம்போ இணையவில்லை. இந்த நிலையில் தான் அஜர்பைஜானின் பாகு வில் நடிகர் அஜித்குமாரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் வெகு விரைவில் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் அல்லது வேறு ஒரு புதிய படத்தில் அஜித் குமார் வெங்கட் பிரபு இணைய உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
அதேநேரம், விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்திலும் அஜித்குமார் கேமியோ கதாபாத்திரத்தில் வருவார் எனவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். ஆனால், இவை அனைத்திற்கும் அடுத்தடுத்த அறிவிப்புகளும், திரைப்படமும் வெளியாகும் போதே விடை தெரியவரும்.
முன்னதாக, விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியதால் இன்னும் ஒரு சில படங்களிலேயே நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். எனவே, அஜித்குமாரை விஜய் படத்தில் நடிக்க வைத்து தியேட்டரை பற்ற வைப்பதற்கான வேலைகளில் வெங்கட் பிரபு இறங்கியுள்ளார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும், அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜயின் அடுத்த படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை. முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை தன்னை அணுகி இருக்கலாம் என விஜய் தன்னிடம் கேட்டதாக கூறியிருந்தது ரசிகர்களை சிலாகிக்க வைத்தது.
அந்த வகையில், இந்த படத்தில் அஜித்குமார் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், இருவரின் ஆரம்பகால திரைப்பயணத்தின் போது 1995ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்னும் படத்தில் விஜய், அஜித் இணைந்து நடித்திருப்பர். இதில் அஜித் பிளாஷ்பேக் காட்சிகளில் வருவார்.
இருவரும் நண்பர்களாக இருக்கும் பொழுது அஜித் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வார். அப்போது விஜய் அவரை கட்டி அணைத்து அழும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கும். எனவே, மீண்டும் ஒரு மிகப்பெரிய மாஸ் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.