‘விடாமுயற்சி’ வெளியீடு எப்போது?

ajith

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன.பல்வேறு சிக்கல்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனால் அஜித்தும் கோபமாகி ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் கொடுத்தார். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இப்போதைய சூழலில் தீபாவளிக்கு வெளியிடலாமா என்று இயக்குநர் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு கேட்கப்பட்டுள்ளது. அதற்குள் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என்று மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ முழுமையாக ‘வேட்டையன்’ வெளியீட்டில் மும்முரமாக இருக்கிறது லைகா நிறுவனத்தின் சார்பில் டிசம்பர் வெளியீடு அல்லது பொங்கல் வெளியீடு என்று விநியோகஸ்தர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தேதியில் வெளியிட்டால் கண்டிப்பாக ‘குட் பேட் அக்லி’ வெளியீடு தள்ளிப்போவது உறுதி. ஏனென்றால் பொங்கலுக்கு ‘குட் பேட் அக்லி’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Share this story

News Hub