எப்போது தொடங்குகிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’... ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட் !

VidaaMuyarchi

 அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையில் உள்ள‌முரண்பாடு காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

VidaaMuyarchi

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்க பல இயக்குனர்களை லைக்கா பரிசீலனை செய்த நிலையில் கடைசியாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததது. இவர் ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித் மற்றும் லைக்கா தரப்பிற்கு பிடித்துவிட்டதால் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

சமீபத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே 22-ஆம் தேதி தொடங்குகிறது. முதலில் சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு அடுத்து ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தை தொடங்க இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

Share this story