ஒரே நாளில் வெளியாகும் அஜித் & விக்ரம் படம்? வேற லெவல் தகவல்..!

vikram ajith

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் கூட உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தினத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அஜித் மற்றும் விக்ரம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்ட நாளில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இதே தேதியில் விக்ரம் நடித்த ’வீரதீர சூரன்’ என்ற படமும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ajith

அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீரதீர சூரன் பாகம் 2’ முதலில் வெளியாகும் என்றும், அதன் பின்னர் தான் முதல் பாகம் வெளியாகும் என்றும் ஏற்கனவே இயக்குனர் அருண்குமார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story