இன்று வெளியாகிறதா ‘AK 62’ அறிவிப்பு ?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

ak 62

அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

அஜித்தின் 61வது படமான ‘துணிவு’ படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்தார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. 

ஆனால் சில காரணங்களால் அஜித்தின் 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கடந்த சில தகவல்கள் பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர் பக்கத்தில் ‘AK 62’ என்ற டேக்கையும் அவர் நீக்கினார். அதனால் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. 

ak 62

இதையடுத்து தடம், கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு ‘மங்காத்தா 2’ படத்தை அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாகவும், இதுதவிர வேறு சில இயக்குனர்களின் பெயர்களும் இணையத்தில் உலா வருகிறது. 

இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. அதனால் படத்தின் இயக்குனர் யார் உள்ளிட்ட பல குழப்பங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என லைக்கா தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story