விரைவில் வெளியாகிறது அஜித் பட அறிவிப்பு... ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள் !

ak 62

 அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்த அஜித், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பார் என்று கடந்து ஆண்டு அறிவிக்கப்பட்டது. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா தயாரிக்கும் என்று மாஸாக அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

ak 62

இதையடுத்து படத்தின் கதையை படித்து பார்த்த அஜித், விக்னேஷ் சிவனை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ‘ஏகே 62’ டேக்கையும் விக்னேஷ் சிவன் நீக்கிவிட்டார். அதனால் ‘ஏகே 62’ படத்தை தடம், கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை பி.எஸ்.மித்ரன் எழுதியுள்ளாராம். 

மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பிடித்துள்ளதால் இந்த படத்திற்கான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் விஜய்யின் ‘லியோ’ படத்தின் அறிவிப்பு அட்டகாசமாக வெளியானதால் அதை எதிர்கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதனால் படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

 

 

 

Share this story