அஜித்தின் ‘ஏகே63’ படத்தின் மாஸ் தகவல் வெளியீடு, இயக்குநர் யார் தெரியுமா?

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘துணிவு’. தல, எச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த இந்த படம் ரசிகர்களாக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகர் அஜித், இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து அஜித் பிரபல இயக்குநரான அட்லீயுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அஜித்தின் 63வது படமாக தயாராகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசைபுயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் படத்தின் கதாநாயகி யார், மர்ர நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு, என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். நடிகர் அஜித் தற்போது லண்டனிற்கு சுற்றுலா சென்றுள்ள அஜித், அங்கு ஒய்வெடுத்துவிட்டு பின் ‘ஏகே 62’ படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.