அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் சம்பவம்...எகிறும் எதிர்பார்ப்பு !

ak62

 நடிகர் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

 ‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக படத்தை தயாரிக்கும் லைக்கா அறிவித்தது. அதன்பிறகு இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆறு மாதம் நடைபெற்ற நிலையில் கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியில்லாததால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். 

ak62

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்திற்கு பிடித்ததால் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.‌ ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.‌ அதன்படி அஜித்தின் பிறந்தநாளான மே 1- ஆம் தேதி படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ‌

Share this story