குடும்பத்துடன் நேரத்த செலவிடும் அஜித்... நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட ஷாலினி !

ajith

தனது கணவர் அஜித் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினி வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்தன் மூலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். கடந்த 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் கடந்த 23 ஆண்டுகளாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். 

ajith

அஜித் - ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார். நடிகர் அஜித், எப்போது தனது குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட்டு வருகிறார். சினிமாவில் நடிப்பதை தவிர மற்ற நேரங்களில் குடும்பத்துடன் இருப்பதையே விரும்புவார். சமீபத்தில் தனது ஷாலினியின் பிறந்தநாளை கூட நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எளிமையாக கொண்டாடினார். 

ajith

இந்நிலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ள அவர், குழந்தைகளுடன் இருக்கும்போது மனம் ஆறுதலடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

 


 

Share this story