அஜித் குமார் மற்றும் போனி கபூரின் (AK & BK) துணிவு பட லேட்டஸ்ட் கிளிக்:

ajith

துணிவு படத்திருலிந்து அஜித் மற்றும் போனி கபூர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

akbk

‘நேற்கொண்ட பார்வை , வலிமை’ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து போனி கபூர், அஜித் கட்டணியில்  மூன்றாவது முறையாக தயாராகிவரும் திரைப்படம் ‘துணிவு’. இந்த  படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக உள்ளது. அதுவும் அஜித் இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரு வேடத்தில் நடித்துள்ளார். படம், வரும் பொங்களை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமெடுத்துள்ளது. ரசிகர்கள் படத்தை திரையில் காண ஆவலாக காத்துள்ளனர்.

ak bkஇந்த நிலையில் அஜித் குமார் மற்றும் போனி கபூர் இருவரும் துணிவு பட படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அண்மையில் இந்த படத்தில் தனது போர்ஷனுக்கான  டப்பிங் பணிகள் நிறைவு பெற்றாதாக நாயகி மஞ்சு  வாரியர் புகைப்படத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share this story