பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ‘அஜித்’தின் “விடாமுயற்சி” – வெளியான தரமான தகவல்.

photo

அஜித் நடிக்க இருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்குவர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

photo

அஜித்தின் 62வது திரைப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  அதுவும் அந்த படத்தின் பெயர்  ‘விடாமுயற்சி’ என்றதும் மேலும் குஷியாகினர். காரணம் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான வீரம், விசுவாசம், விவேகம் என ‘வி’  சென்டிமெண்ட் தொடர்வதால் தான். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாம். ஜுன் மாதம் அஜித்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருகிறாராம். மொத்தமாக படத்தை 70 நாட்களுக்குள் எடுத்து முடிக்க மகிழ்திருமேனி பக்கா ஸ்கெச் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அஜித்தின் காட்சிகள் 40 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாம்.

photo

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்பதை போல தாமதமாக படம் குறித்த அறிவிப்பு வந்தாலும் பக்காவாக தாங்கள்  என்ன செய்ய போகிறோம் என்பதில் படக்குழு தொளிவாக இருக்கிறார்களாம். இதனால் நான்கு மாதத்தில் படத்தை முடித்துவிட்டு  போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை  தொடங்க திட்டமிட்டுள்ள இயக்குநர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறாராம்.  இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடர்ந்து படத்தின் கதைகளம் என்ன யார் யார் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this story