பாடல்கள் பக்கா மாஸாக இருக்கும் - ‘துணிவு’ குறித்து அப்டேட் கொடுத்த ஜிப்ரான் !

thunivu

‘துணிவு’ படத்தின் பாடல்கள் குறித்து புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். 

‘வலிமை’ படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார்.  உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது.

thunivu

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

thunivu

தற்போது இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கு என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பாடல்கள் அனைத்தும் பக்கா மாஸாக வந்திருக்கு. அஜித் ரசிகனா என்ன பண்ண முடியுமோ, அதை நான் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story