'Ak 62' தாமதமாவது ஏன் ?... வெளியானது முக்கிய தகவல் !

ak62

 அஜித்தின் 62வது படம் தாமதமாவது குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக படத்தை தயாரிக்கும் லைக்கா அறிவித்தது. அதன்பிறகு இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஆறு மாதம் நடைபெற்ற நிலையில் கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியில்லாததால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். 

ak62

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.  மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித்திற்கு பிடித்ததால் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

ak62

இப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.‌ ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதனால் இந்த தாமதம் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி கிடக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி திரைக்கதை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அது இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. அதேநேரம் படத்தை அறிவிப்பதில் எந்த அவசரமும் காட்ட தேவையில்லை.  அனைத்து பணிகளும் முடிந்த பிறகு அறிவிக்கலாம் என்று அஜித் கூறிவிட்டாராம். அதனால் அடுத்த மாதம் அறிவிக்கலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story