காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. அஜித்தின் ‘விடாமுயற்சி’ சூப்பர் அப்டேட்

vidaamuyarchi

 அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு எந்த இயக்குனருடைய இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்ற குழப்பம் இருந்து வந்தது. அதன்பிறகு ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதோடு அனிரூத் இசையமைப்பாளராகவும்,  நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளனர். 

vidaamuyarchi

பின்னர் மகிழ் திருமேனி எப்போது படத்தை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ‘விடாமுயற்சி’ தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.   புனேவில் தொடங்கும்  இந்த  படப்பிடிப்பு அடுத்து சென்னை, ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. 

இதுதவிர நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், அர்ஜூன் தாஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம். அதற்கு முன்னரே படத்தில் நடிக்கும் ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். 

 

 

Share this story