நடிகர் மாதவன் குடும்பத்துடன் அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் வைரல்
நடிகர் மாதவன் வீட்டிற்கு தல அஜித் திடீரென சென்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாதவன் மற்றும் அஜித் குடும்பங்கள் ஏற்கனவே நட்புறவில் உள்ள நிலையில், துபாயில் மாதவன் தனது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் மாதவனின் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், திடீர் விசிட் ஆக இதில் அஜித் கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் மாதவனை நேரில் சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்து, "என்றென்றும் புன்னகை" என்று கேப்ஷன் ஆக பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். அந்த புகைப்படமே இன்னும் வைரலாகி வரும் நிலையில், தற்போது மாதவனை அஜித் சந்தித்த புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.