அப்பாவை போல் கார் ரேஸில் அசத்தும் அஜித் மகன்.. வீடியோ வைரல்...!

aadhvik

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் ரேஸ் காரை ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல், இத்தாலியில் நடந்த கார் போட்டியிலும் அவர் கலந்து கொண்டு, அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார்.


இந்த நிலையில், சர்வதேச அளவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய அஜித், அதன் பின்னர் குடும்பத்துடன் சென்னை தனியார் கார் ரேஸ் மைதானத்திற்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அதில் அஜித் மட்டும் இல்லாமல், அவரது மகன் ஆத்விக்கும் ரேஸ் காரை அசால்டாக ஓட்டியதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏற்கனவே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிக்கும் அஜித்தின் மகன் ஆத்விக், கார் ரேஸ் போட்டியிலும் தனது கவனத்தை செலுத்துவார் என்றும், அஜித் போலவே அவரும் சர்வதேச அளவில் ஒரு கார் ரேஸ் வீரராக உருவாக வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.


 

Share this story