விடாமுயற்சி ரிலீஸ் குறித்து அஜித் கொடுத்த அப்டேட்...!
நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அஜித் தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ரேசிங் செய்யும் வீடியோ மற்றும் ரேசிங் குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், 'விடா முயற்சி' வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில். அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் அஜித் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
AK and his fans.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
I love them un conditionally. pic.twitter.com/XA3pNbhn6S
அதில் அவர் கூறுவதாவது " நடிப்பும் ரேசும் உடல் மற்றும் மனதளவில் இடம் பெறும் முக்கிய ஒன்றாகும். எனக்கு மல்டி டாஸ்கிங் செய்வது பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை முழுமையாக செய்யக் கூடியவன் நான். என்னுடைய இரண்டு திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளது. ஒன்று இந்த ஜனவரி மாதம் மற்றொன்று வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனால் நான் ரேசிங்கில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். என் ரசிகர்களை நான் மிகவும் கட்டுபாடின்றி காதலிக்கின்றேன்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் விடாமுயற்சி கண்டிப்பாக ஜனவரி மாதம் வெளியாவது உறுதியான ஒன்றால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.