விரைவில் வெளியாகும் ‘AK 62’ டைட்டில் லுக் போஸ்டர்.. எகிறும் எதிர்பார்ப்பு !

ajith

அஜித்தின் 62வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட லைக்கா திட்டமிட்டுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்தின் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையில் திருப்தியில்லை என்ற காரணத்தால் அவர் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அதேநேரம் கடந்த வாரம் அஜித் மற்றும் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்திற்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

ajith

லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. அதற்கு முன் ‘லியோ’ படம் போல் டைட்டில் ப்ரோமோ வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் ப்ரோமோ ஷூட்டிங் பணிகள் தாமதமாகி வருவதால் முதலில் போஸ்டர் மட்டுமாவது வெளியிட லைக்கா திட்டமிட்டுள்ளது. 

இந்த படத்திற்கு ‘டெவில்’ என்று ஆங்கிலத்தில் தலைப்பு வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ‘துணிவு’ படத்தில் அஜித் கதாபாத்திரத்திற்கு பெயர் இல்லாத நிலையில் டார்க் டெவில் என்று அழைக்கப்பட்டார். அந்த பெயரை சுருக்கி இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் மகிழ் திருமேனி பொதுவாக தமிழில் மட்டுமே தலைப்பு வைப்பார். அதனால் தமிழில் தான் தலைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. 

Share this story