‘ஏகே 62’வை ஓவர்டேக் செய்த ‘ஏகே 63’ – அட… இது செம தகவலா இருக்கே!....

photo

நடிகர் அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சமயத்தில், அந்த படத்தை முந்திக்கொண்டு அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

photo

ஏகே 62 இந்த பெயர் பல நாட்களாக சமூகவலைதலத்தில் ஒளித்துகொண்டே இருக்கிறது. முதலில் இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர் அவரது கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியில்லை என கூறி அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்ததாக அந்த படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கபோவதாக தகவல் கசிந்தது. சரி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்த்து பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்சமயம் வரை அது வந்தபாடில்லை. இதனால் ரசிகர்கள் சேர்ந்துபோய்விட்டனர்.

photo

இந்த நிலையில்தான் அஜித்தின் 63 வது படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஏகே 63 படத்தை வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் இயக்க போகிறாராம். அதுமட்டுமல்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் அஜித் 'ஏகே 63' படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறதுஇந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு  2024-ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story