ஒரிஜினல் கேங்க்ஸ்டராக ஏ.கே... 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல் வெளியீடு..!

ak

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள  'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல் வெளியானது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.  அதைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின்  மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை  'குட் பேட் அக்லி' படத்தின்  ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam)  என்ற முதல் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஓஜி சம்பவம்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.  இப்பாடலில் அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் ரெஃபரன்ஸுகள் மற்றும் வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்பாடலை சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story