AK வரார் வழிவிடு டா... ட்ரெண்டிங்-ல் குட் பேட் அக்லி டிரெய்லர்...!

ak

அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டிரெய்லர் ட்ரெண்டிங் no 1-ல் உள்ளது. 

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. 


 இந்த நிலையில், நேற்றிரவு படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.  ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க மாஸ், ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியதாக இருக்கிறது. அர்ஜுன் தாஸ் பேசும் வசனத்தில் இருந்து தொடங்கும் டிரெய்லரில் அவரது தோற்றம் மிக வித்தியாசமாக உள்ளது.


இதுவரை படத்தில் அர்ஜுன் தாஸ், பிரசன்னா என நிறைய நடிகர்கள் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தாலும் படத்தில் அவர்களது தோற்றத்தை இந்த டிரெய்லர் மூலம் தான் காட்டியுள்ளனர் படக்குழுவினர். அர்ஜுன் தாஸை போலவே பிரசன்னாவும் மிக மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார். மொத்த டிரெய்லரிலும் இளையராஜாவின் ’ஒத்த ரூபாய் தாரேன்’ பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் சிம்ரன் நடித்துள்ளதை டிரெய்லரிலேயே சர்ப்ரைஸாக கடைசியாக காட்டுகின்றனர். முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களின் தியேட்டர் கொண்டாட்டத்திற்கான படமாக ’குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளதை இந்த டிரெய்லர் உணர்த்துகிறது. இந்நிலையில், யூடியூபில் இந்த டிரெய்லர் ட்ரெண்டிங் no 1-ல் உள்ளது. 

 

Share this story