‘ஏகே62’ இயக்குநர் 'மகிழ்திருமேனி'யும் இல்லையாம்!.........- புதிய இயக்குநர் பற்றி வெளியான தகவல்.

photo

அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கபோவதாக கடந்த ஆண்டே தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் அவர் அந்த படத்திலிருந்து விலகியதாகவும் விக்னேஷ்  சிவனிற்கு பதிலாக படத்தை மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தான் இயக்க போவதாக தகவல் வெளியானது, ஆனால் தற்போதைய தகவல் படி இந்த இயக்குநரும் படத்தை இயக்கவில்லையாம்!.... இவருக்கு பதிலாக கோலிவுட்டின் முன்னணி இயக்குநரின் பெயர் அடிபடுகிறது.

photo

துணிவும் வாரிசும் ஒரே தேதியில் வெளியானதை அடுத்து தற்போது தளபதி விஜய் தனது அடுத்த படத்தின் பணிகளின் மும்முரமாக இறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது படத்தின் வெளியீட்டு தேதி வரும் அக்டோபர் என அறிவிக்கப்பட்டு வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க அஜித்தின் அடுத்த படமாக 62வது படத்தின் இயக்குநர் யார் என்றே உறுதியாகாமல் இவருக்கு பதில் அவர், அவருக்கு பதி இவர் என தகவல் மாறி மாறி வருவது, அஜித் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

photo

அதாவது கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி சொன்ன கதை கூட லைகா தரப்பை திருப்திப்படுத்தவில்லை என்றும் அவரும் ஏகே 62 படத்தை இயக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. சரி அப்போ யார் தான் அஜித்தை அடுத்து இயக்க போகிறார், என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடையாக கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு, ஏ ஆர் முருகதாஸ் அகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன, எது எப்படியோ விரைவில் ‘ஏகே62’ படத்தின் இயக்குநர் யார் என்ற  அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story