அஜித்தின் ஏகே62பட தலைப்பு இதுதான்!– உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

photo

அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர். முதலில் இந்த படத்தை  விக்னேஷ் சிவன் இயக்க போவதாக இருந்தது. பின்னர் கதையின் இரண்டாம் பாகத்தில் படதயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி இல்லாததால் அந்த கூட்டணி தடைப்பட்டது. அடுத்ததாக ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்க போவதாக தகவல்கள் கசிந்தது. இந்த கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது.

photo

மே 1 ஆன இன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதாவது படத்திற்கு ‘விடாமுயற்சி’ என பெயரிட உள்ளனர்.  அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை சுபாஷ்கரன் தயாரிக்கிறார். விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் யார் என்ற விவரம் தெரியவரும்.

Share this story