தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘AK 62’ – அஜித்துடன் இணையும் பிரபல பாலிவுட்நடிகை வேற லெவல் அப்டேட்.

photo

போனிகபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ,அஜித்குமாரின் நடிப்பில் உருவான  ‘துணிவு’ திரைப்படம் திரையரங்கங்களில் வசூலை வாரி குவித்து வருகிறது. அடுத்ததாக அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படம் அஜித்தின் 62ஆவது திரைப்படமாக தயாராக உள்ளது. படத்தின் முதல்கட்ட பணிகள் நடந்து முடிந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பும் துவங்க உள்ளது.

photo

இந்த நிலையில் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிககவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், தற்போது அஜித்துடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிக்கபோவதாக படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.  இதற்கு முன் 2000ம் ஆண்டில் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ‘ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

photo

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இது வெறும் தகவலாக மட்டுமே உள்ள நிலையில் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘AK 62’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘நெட்பிளிக்ஸ் தளம்’ கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story