#Ajithkumar நடிக்கும் "குட் பேட் அக்லி" அதிரடியான டைட்டில் உடன் வெளியான அறிவிப்பு

ak63 announcement

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 70  சதவீதம் முடிவடைந்துள்ளது.

ajith magizh

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இன்று அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு ரிலீஸ் தேதி உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தினை த்ரிஷா இல்லனா நயன்தாரா, AAA , பாகிஹீரா  மற்றும் மார்க் ஆன்டனி திரைப்படத்தினை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ajith with aadhik

'குட் பேட் அக்லீ' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 2025 ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

goodbadugly

இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. மேலும் அடுத்தகட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

 

Share this story