ஆகாஷ் முரளி - அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஆகாஷ் முரளி -  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஷ்ணு வரதன், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் அஜீத் வைத்து இயக்கிய பில்லா படம் சூப்பர் ஹிட்டடித்தது. கேங்ஸ்டராக அஜீத் நடித்திருந்த அந்த படத்திற்கு ஏகப்போக வரவேற்பு இருந்தது. இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தில் அஜீத்தை செம ஸ்டைலாக காட்டியிருப்பார் விஷ்ணு வரதன்.  நீண்ட நாட்களுக்கு பிறகு விஷ்ணு வரதன் ஆகாஷ் முரளியை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று முடிந்தது

ஆகாஷ் முரளி -  அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சரத்குமார், குஷ்பு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

Share this story