ஆகாஷ் முரளியின் அடுத்த பட அப்டேட்...!

நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியான நடிகர் ஆகாஷ் முரளியின் அடுத்த பட அப்டேட் வெளியாகி உள்ளது.
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான படம் 'நேசிப்பாயா'. இதில், நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடித்தனர். ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனா இந்த திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், நடிகர் ஆகாஷ் முரளியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய இளன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ, ஆகாஷ் முரளியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.