பிரபல தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா.. மாஸாக வெளியாகவிருக்கும் அறிவிப்பு !

suriya

 ‘அகண்டா’ படத்தின் இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டுமே பிசியாக நடித்து வரும் அவர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை முடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். 

suriya

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதுதவிர இந்தியில் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

suriya

தெலுங்கில் மசாலா ஹிட் படங்களை கொடுத்து வரும் போயப்பட்டி சீனு இந்த படத்தை இயக்கவுள்ளாராம். ‘அகண்டா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய போயப்பட்டி சீனு சூர்யாவுடன் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story