சமந்தாவிற்கு நாகசைத்தன்யாவின் சகோதரர் ஆறுதல்….”டியர் சாம்”, என அக்கறையோடு பதிவு.

sam

 நாகசைத்தன்யாவின் சகேதரர் அகில் அக்கினேனி, சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

sam

நடிகை சமந்தா அரியவகை ‘மயோசிடிஸ்’ எனும் நோயால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார். இந்த வகை நோய் உடலின் தசை , மூட்டுகளை பாதிக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாராகும். இது பற்றி சமந்தா தெரிவிக்கையில் “நான் அரியவகை ‘மயோசிடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த பிரச்சனையிலிருந்து குணமடைந்த பிறகு இது குறித்து தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தை விட தற்பொழுது சிகிச்சைக்கு அதிக காலமாகிவிட்டது. இதனால் இப்பொழுதே இதை சொல்ல வேண்டிய ஆவசியம் ஏற்பட்டது, அனைவருக்கும் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் வரும் என்பதை நான் உணர்கிறேன், நான் விரைவாக குணமாகி கொண்டிருக்கிறேன் என மருத்துவர் கூறினார்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார் சாம்.

samantha

இதைத்தொடர்ந்து பலருமே சமந்தாவிற்கு ஆறுதலையும், விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக நாகசைத்தன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி “ All the love and strength to you dear sam” என ஆறுதலாக பதிவிட்டுள்ளார்.

samanthaa

 இதைத்தொடர்ந்து சமந்தா உடல் நலம் குறித்து ஆறுதலுக்காக ஒரு வார்த்தை கூட நாகசைத்தன்யா சொல்லவில்லை, என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this story