அக்சய் குமாரின் 'கேசரி சாப்டர் 2' பட டிரெய்லர் ரிலீஸ்...!

அக்சய் குமார் நடித்த 'கேசரி சாப்டர் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்”. இதில் நடிகை அனன்யா பண்டேயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர சி.சங்கரன் நாயர் பிரிட்டீஸ் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடினார். இந்த கதை மையமாக வைத்து தர்மா புரொடக்சன்ஸ், கேப் ஆப் குட் பிலிம்ஸ் மற்றும் லியோ மிடியா கலெக்டிவ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.
This is a wound.
— Akshay Kumar (@akshaykumar) April 3, 2025
This is a roar.
This… is #KesariChapter2!
Trailer out now. https://t.co/Xs9GBDIQhw
In cinemas 18th April, worldwide. pic.twitter.com/z9D26aSRoL
இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.