ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய்.. படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட செட் !

achcham enbathu illayea

ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். 

முதல்முறையாக இயக்குனர் ஏ.எல் விஜய்யுடன் அருண் விஜய் கைகோர்த்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’.  இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

achcham enbathu illayea

ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவுபெற உள்ளது. 

achcham enbathu illayea

லண்டன் படப்பிடிப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. லண்டன் சிறையில் நடப்பது போன்று கதைக்களத்தை எடுக்க இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. 

achcham enbathu illayea

இந்த பிரம்மாண்ட செட்டை உருவாக்க கலை இயக்குனர் சரவணன் மற்றும் நூற்றுக்கணக்காக ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை பின்னி மில்லில் 2.5 ஏக்கரில் நடைபெற்று வரும் இந்த செட் பணிகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் அருண் விஜய்யின் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் வரவுள்ளனர்.  

 

Share this story