‘ஆலம்பனா’ படத்தின் டிரைலர் வெளியீடு!
நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள ‘ஆலம்பனா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநரான பார்.கே.விஜய் இயக்கத்தில், டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘ஆலம்பனா’. படத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு கதாநாயகியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். நடிகர் முனிஸ்காந்த் பூதமாக நடித்துள்ளார். அலாவுதீனும் அற்புத விளக்கும் கான்செப்ட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் என தொடர்ந்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை கூட்டிய நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.