சூர்யா 45 படத்தில் இணைந்த ஆலப்புழா ஜிம்கானா பட நடிகை...!
1744285501824
ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்த நடிகை அனகா ரவி சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. த்ரிஷா, சுவாசிகா, சிவதா , யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனகா ரவி இணைந்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துள்ளார். இதற்கான புரொமோசன் நிகழ்ச்சியில் இதனை அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

