நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த `ஆலப்புழா ஜிம்கானா' படக்குழு

`ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென். இவர் தற்பொழுது காலித் ரஹ்மான் இயக்கத்தில் ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. காலித் ரஷ்மான் இதற்கு முன் உண்டா, லவ், தல்லுமாலா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தை காலித் மற்றும் ஸ்ரீனி சசீந்தரன் இணைந்து எழுதியுள்ளனர். நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனக்ஹா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக Everyday மற்றும் பஞ்சாரா பன்ச் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.படத்தின் இசையை விஷ்ணு விஜய் மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் செய்துள்ளார்.
#AlappuzhaGymkhana Team Visits #Sivakarthikeyan !!
— Forum Reelz (@ForumReelz) April 8, 2025
2 More Days to Go pic.twitter.com/9uZ7eMSXqo
இந்நிலையில் ஆழப்புழா ஜிம்கானா படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.அப்பொழுது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இதே நாளில் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த பசூக்கா, பேசில் ஜோசப் நடித்த மரணமாஸ் மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.