பல விருதுகளை வென்ற All We Imagine As Light படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
ஆல் வி இமாஜின் ஆஸ் லைட் { A11 Wc Imaginc As Light} என்ற இந்திய திரைப்படம் பல சர்வதேச உயரிய விருதுகளை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுகளை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை பாயல் கபாடியா இயக்கியுள்ளார். இப்படத்தில் கனி கஸ்தூரி, திவ்ய பிரபா, சாயா கதம் மற்றும் ஹிருது ஹரூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2024 கேன்ஸ் பிலிம் ஃபெஸ்டிவல் உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. 1994 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு இந்திய திரைப்படம் இந்த விருதை வாங்கியது குறிப்பிடத்தக்கது. பலரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என காத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 3 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.