ஓடிடியில் வெளியானது All We Imagine as Light திரைப்படம்...!

ott
கான் திரைப்பட விழாவில் விருது பெற்ற All We Imagine as Light திரைப்படம், தற்போது Disney Plus Hotstar ஓடிடியில் வெளியாகியுள்ளது. பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இந்த நிலையில் இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Share this story