மலையாள நடிகர் டைரக்க்ஷனில் நடிக்க இருக்கும் புஷ்பா நடிகர்

புஷ்பா படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்து மலையாள நடிகர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
அல்லு அர்ஜுனின் 22-வது படமும், அட்லீயின் இயக்கத்தில் வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஃபேண்டஸி கதையாகக் கருதப்படும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒன்று அனிமேஷன் கதாபாத்திரமாக இருக்கலாம். ஜவான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீயும், புஷ்பா பட நாயகனும் இணையும் இப்படத்தின் பட்ஜெட் 700 கோடி என்று முன்னர் செய்திகள் வெளியாகின.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் பேசில் ஜோசப் தான் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை இயக்க உள்ளாராம்.
அல்லு அர்ஜுனை மின்னல் முரளி மூலம் புகழ் பெற்ற பேசில் ஜோசப் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தெலுங்கு ஊடகங்களில் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அட்லீ படத்திற்குப் பிறகு, பேசில் ஜோசப்பின் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.