சென்னையில் அல்லு அர்ஜுன்... விரைவில் வெளியாகும் அட்லீ பட அப்டேட்...!

நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை வந்துள்ளதால், அட்லீ படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லீயுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
AlluArjun in Chennai#AlluArjun met Sun Pictures Chief #KalanithiMaran and director #Atlee in Chennai today. This key discussion comes ahead of the official April 8th announcement!#AlluArjun pic.twitter.com/hPhtSp2ZEy
— Telugu Chitraalu (@TeluguChitraalu) April 4, 2025
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்படுகிறது.இதன் மூலம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.