படுகாயமடைந்த சிறுவனை நேரில் சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன்!
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படம் தற்போது வரை ரூ. 1830 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை காண வந்த ரேவதி என்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அதேசமயம் ரேவதியின் 9 வயது மகன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Over a month after the theatre stampede, actor @alluarjun visits 8-year-old Sritej who was injured in the stampede and lost his mother. pic.twitter.com/64ykIyuX5m
— Akshita Nandagopal (@Akshita_N) January 7, 2025
இந்நிலையில் அல்லு அர்ஜுன் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனை மருத்துவமனையில் சந்தித்து அச்சிறுவனின் தந்தையிடம் நலம் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்ற பிறகு நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.