மீண்டும் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?

aa

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதை தயாரிப்பாளர் உறுதி செய்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. குறைந்த நாட்களில் 1000 கோடி வசூலை கடந்த முதல் இந்திய படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.aa

தற்போது தயாரிப்பாளர் நாக வம்சி பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருக்கிறார். அப்படம் ராஜமெளலி படங்கள் பாணியில் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும், உலகளவில் யாருமே அப்படியொரு காட்சியமைப்புகளை உருவாக்கியதில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார் நாக வம்சி. பிரம்மாண்ட தயாரிப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Share this story