அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு 5 கதாநாயகிகள்...?

atlee

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி அதையடுத்து சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அடுத்தபடியாக புஷ்பா 2 படத்தில் நடித்த அல்லு அர்ஜுனை வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார் அட்லி. மறு ஜென்மம் குறித்த கதையில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஐந்து நடிகைகள் நடிக்க போவதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

atlee

இதில், ஜான்வி கபூர் உள்பட இரண்டு இந்திய நடிகைகள் நடிக்க, அமெரிக்கா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த 3 சர்வதேச நடிகைகளும் நடிக்கிறார்களாம். அல்லு அர்ஜுன் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் இந்த படம் பான் இந்தியா கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Share this story