"ராக்கா" வை தொடர்ந்து தனது 23வது படத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜுன் -டைரக்டர் யார் தெரியுமா ?
1785976204000
அட்லீ இயக்கத்தில் ‘ராக்கா’ என்ற பான்வேர்ல்ட் படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான தனது ரசிகர் மன்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட அளவு நேரமும், ஆற்றலும் இருக்கிறது. உங்களை பேட்டரியாக நினைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் 100 சதவீத ஆற்றலுடன் எழுகிறீர்கள். நேரம் கடந்தவுடன் ஆற்றல் குறைய தொடங்குகிறது. 100 சதவீத ஆற்றலை எதில் முதலீடு செய்கிறீர்கள் என்பதே எனது கேள்வி. ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலோ, ட்ரோல் செய்வதிலோ, அவர்களை பற்றி தாறுமாறாக பேசுவதிலோ நேரத்தை வீணடிக்காதீர்கள்."என்றார் .

