அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணி படப்பிடிப்பு அப்டேட்!

atlee

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அல்லு அர்ஜுன். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.atlee

இப்படத்தில் நடிப்பதற்கு ரூ.175 கோடியை சம்பளமாக பெற்றிருப்பதாகவும், மேலும் 15% லாபத்தில் பங்கினை அல்லு அர்ஜுன் கேட்டிருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கணக்கின்படி இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் நடிகராக அல்லு அர்ஜுன் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் பிரம்மாண்ட கதை ஒன்றை அல்லு அர்ஜுனுக்காக உருவாக்கி இருக்கிறார் அட்லீ. விரைவில் இப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Share this story

News Hub