ரூ.1500 கோடி வசூலை கடந்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’

pushpa 2

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.


இந்தி வெர்ஷனில் இந்தப் படம் ரூ.618 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 2வது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் படம் ரூ.60 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தில் இடம்பெற்ற ’கிஸ்ஸிக்’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1500 கோடி வசூல் என்பது புதிய மைல்கல். மேலும் படம் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1800 கோடியை சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

  

Share this story