‘இளையராஜா’வுடன் கைகோர்க்க தயாரான ‘அல்போன்ஸ் புத்திரன்’ – அவரே போட்ட ட்வீட்.

photo

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அவரே ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

photo

நேரம்படத்தின் மூலமாக தமிழ் மற்றும் மலையாள மொழி சினிமாவில் காலடி எடுத்துவைத்தவர்அல்போன்ஸ் புத்திரன்’. இதனை தொடர்ந்து மலையாளத்தில் சாய்பல்லவி, நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்த ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வெளியானது முதல் மலையாள ரசிகர்களை கடந்து அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. குறிப்பாக கோலிவுட்டில் இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட். அடுத்ததாக பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார்இந்தநிலையில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புது படத்தை இயக்கபோவதாக அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

photo

அதற்கான அப்டேட்டை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதாவது “சில நாட்களுக்கு முன் 'தமிழ் இசையின் ராஜா' மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க தவறவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் நான் இயக்கும் படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்" என இளையராஜாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


 

Share this story